அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Tuesday, December 4, 2018

தொடர் முழுக்க போராட்டம்!!

0 comments
டிசம்பர் 6 INTJ சார்பாக தமிழகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் முழுக்க போராட்டம்!!
ஜனநாயக சக்திகள் கண்டன உரையாற்ற உள்ளனர்!!
அல்லாஹ்வின் பள்ளியை மீட்கும் தொடர் போராட்டத்தில் பங்கேற்க அழைக்கிறோம் !!
பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்கள் இடத்தில் வழங்க கோரியும் இடித்த குற்றவாளிகளை தண்டிக்க கோரியும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்ஷா
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் பேச்சாளர்கள், நிர்வாகிகள், உலமாக்கள், கண்டன உரையாற்ற உள்ளனர். அது மட்டும் இல்லாமல் ஜனநாயக உரிமையை பெற நம் உடன் இணைந்து குரல் கொடுக்க அரசியல் கட்சி, இயக்க நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்பு கட்சி இயக்க நிர்வாகிகள், தலித் இயக்க நிர்வாகிகள், பெரியார் இயக்க நிர்வாகிகள், தமிழ் தேசிய இயக்க நிர்வாகிகள், கம்யூனிச கட்சி நிர்வாகிகள், என தோழமை சக்திகளை தமிழக முழுவதும் ஒன்று திரட்டி கண்டன குரலாக பதிவு செய்ய. தமிழகத்தில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற உள்ளது.
அதற்கான பணிகளை மாவட்ட நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் மிக வேகமாக செய்து வருகிறார்கள். மாநில நிர்வாகிகள் மேற்பார்வையில் பணிகள் வேக படுத்த பட்டு வருகிறது. மற்ற வருடம் இல்லாமல் இந்த வருடம் நம் கண்டனத்தை அதிகம் பதிவு செய்ய வேண்டிய தருணம். எதிரிகள் ராமர் கோயில் அங்கே கட்ட வேண்டும் என்ற கோஷத்தை தேர்தல் ஆதாயத்திற்கு அதிகம் எழுப்பி கொண்டு இருக்கும் நிலையில் சமூதாய சொந்தங்களே. நம் பங்களிப்பு என்பது அதிகம் இருக்க வேண்டிய தருணம் இது !
ஒரு பள்ளிக்கு எத்தனை வருடம் போராட்டம் நடத்தவது. இயக்கங்கள் அவர்களை வளர்த்து கொள்ள போராட்டம் செய்கிறார்கள் எனசிலர் ஏளனம் செய்யலாம். நன்மையை ஏவி தீமையை தடுக்கும் அல்லாஹ்வின் பள்ளியை மீட்கும் தொடர் போராட்டம் இது. ஒன்றுக்கு முடங்கி போய் இருந்தால் இன்னும் அதிகம் இழந்து இருப்போம் என்பதை மறந்தவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பள்ளிக்காக
சமூதாயமே அழைக்கிறது..
இடித்தோர் எண்ணம் கருக!!
இடிகளை திரண்டு வருக!!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
INTJ ஊடக பிரிவு !!


0 comments:

Post a Comment