அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Wednesday, December 28, 2011

அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுபவரே முஸ்லிம்!

0 comments

அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுபவரே முஸ்லிம்!
10:72. (நபி நூஹ் (அலை) தம் சமுதாயத்தை நோக்கி:) “நீங்கள் என்னைப் புறக்கணித்தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை ஏனென்றால்) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் அல்லாஹ்விடமேயன்றி மற்றெவரிடமுமில்லை. நான் முஸ்லிம்களில் இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.
2:131,132. தன்னைத் தானே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்ராஹீமுடைய இஸ்லாம் மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் இருப்பார். அவருக்கு அவருடைய இறைவன் ‘அஸ்லிம்’ நீர் (எனக்கு முற்றிலும்) வழிப்படும் எனக்கூறிய சமயத்தில், அவர் (எவ்விதத் தயக்கமுமின்றி) ‘அகிலமனைத்தின் இரட்சகனாகிய உனக்கு இதோ நான் இஸ்லாமாகி விட்டேன் (வழிப்பட்டேன்) என்று கூறினார்” 
10:84. நபி மூஸா (அலை) (தம் சமூகத்தவரை நோக்கி) என்னுடைய சமூகத்தவரே! நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசித்து உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் வழிப்படுகிறவர்களாக (முஸ்லிமாக) இருந்தால் அவனை முற்றிலும் நம்பி விடுங்கள். அவனிடமே உங்கள் காரியங்களை ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினார்கள்.”
7:126. “(அன்றி) எங்களிடம் இறைவனின் அத்தாட்சிகள் வந்தபோது நாங்கள் அவனைக் கொண்டு விசுவாசம் கொண்ட (இந்தக் குற்றத்தைத்) தவிர வேறு எதற்கு எங்களிடமிருந்து பழிவாங்கப் போகிறாய் என்று ஃபிர்அவ்னை வினவி, ‘இறைவா! எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக (முஸ்லிம்களாக) எங்களை ஆக்கி எங்களைக் கைப்பற்றுவாயாக’ என்று (கூறி மனந்திருந்தியசூனியக்காரர்கள்) பிரார்த்தித்தார்கள்”
12:101. யூஸுஃப் நபி (அலை) ‘இறைவா! நிச்சயமாக நீ எனக்கு ஒரு ஆட்சியை அருள் புரிந்தாய். கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு நீ கற்று தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தோனே! இம்மை, மறுமையில் என்னை இரட்சிப்பவன் நீயே! முற்றிலும் உனக்கு வழிப்பட்டவனாக (முஸ்லிமாக) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்தில் என்னை சேர்த்து விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.”
5:44. தௌராத்தையும் நிச்சயமாக நாம் தான் இறக்கி வைத்தோம். அதில் நேர்வழியும் இருக்கிறது பிரகாசமும் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு (முஸ்லிமாக) நடந்த நபிமார்கள் அதனைக் கொண்டே யூதர்களுக்கு மார்க்கக் கட்டளையிட்டு வந்தார்கள்”.
5:111. “அன்றி என்னையும் (அல்லாஹ்வையும்) என்னுடைய தூதரையும் (அதாவது உம்மையும்) (ஈஸா (அலை) விசுவாசிக்கும்படி அப்போஸ்தலர்கள் என்னும் உம் சிஷ்யர்களுக்கு நான் அறிவித்த சமயத்தில் அவர்கள் (அவ்வாறே) நாங்கள் விசுவாசித்தோம். நிச்சயமாக நாங்கள் முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களென்பதற்கு நீரே சாட்சியாக இருப்பீராக எனக் கூறியதையும் நினைத்துப் பாரும் (என அந்நாளில் கூறுவான்.)”

Wednesday, December 14, 2011

பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்

0 comments

பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்


பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர்?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.


தென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது.
எல்லோரும் என்னை வியப்புடன் பார்ப்பது எனக்குள் மிகுந்த பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.


வகுப்பு இடைவேளையின் போது சகமாணவிகள் பர்தாவைப் பற்றி பல கேள்விகளை எழுப்பினர். நான் பர்தா அணிந்திருப்பதைப் பார்த்த எனது ஆசிரியையும் அதன் காரணங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். ஆகவே, வரலாறு பாட வகுப்பின் போது அது பற்றி உரையாடலாம் எனக் குறிப்பிட்டார். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. திருமறை வலியுறுத்தும் பர்தாவின் பல நன்மைகளை எனது அனுபவத்தில் கண்டு கொண்டேன். முதலாவதாக, நான் பெண் என்று மரியாதை காட்டப்படுகிறது. ஒரு பால் பொருள் (Sex Object) என்று நோக்கப்படுவதில்லை.இரண்டாவதாக, நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்று மக்களால் அறியப்படுகிறது. பர்தா அணிவதன் மூலம் நான் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மற்றவர்கள் என்னைத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. நான் பர்தா அணியவில்லை என்றால், அதைப்பற்றி கேள்விகள் யாரும் கேட்கப்போவதில்லை.


ஆகவே, எனது நெறியான இஸ்லாம் பற்றிய செய்திகளை விளக்குவதற்கு கடைசியில் வழிவகுக்கும். பர்தாவைப் பற்றிய ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடக்கூடும்.பர்தா பற்றிய வியத்தகு அனுபவங்கள் எனக்கு ஏற்பட்ட போதிலும், மற்றவர்கள் எவரும், எவரையும் வற்புறுத்துவது கூடாது எனக் கருதுகிறேன். அடிக்கடி பர்தா அணிவது பற்றிய தவறான, வழிதவறிய அழுத்தம் தரப்படுகிறது. பர்தா அணியாதவர்கள் ஏதோ பெரும் தவறிழைத்துவிட்டனர் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விடக் கூடாது. மாறாக, பர்தா ஏன் அணிய வேண்டும் என்பதை மென்மையாக எடுத்துச் சொல்ல வேண்டும். மக்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை எடுத்துச் சொல்ல வேண்டுமேயல்லாது, அவைகள் பற்றி கட்டாயப்படுத்தக் கூடாது.பர்தா அணிதல் என்பது ஒருவரின் நெறியை பகிரங்கமாகப் பறைசாற்றுவதாகும். அதன் மூலம், ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடும்.ஏனையவற்றைவிட மதத்தைப் பின் பற்றுதல் மிகவும் எளிதானது என்பதை உணர்த்துவதாக பர்தா அமைந்துள்ளது.


வீண் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்து விடுவதைக் காட்டிலும், எனது தலைமுடிகள் பர்தாவினால் மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து விடுவது மிகவும் எளிதாகும். பர்தா அணிவதன் மூலம் ‘எனது குணநலன்களில் சிறந்த மாற்றங்கள்’ ஏற்பட்டுள்ளன. பர்தாவைப் பற்றி தவறான கருத்துக்களே மக்களிடம் இன்னும் நிலவி வருகிறது. ஏனெனில் மற்றவர்களை மதிப்பிடுவது என்பது மிகவும் எளிதாகும். பர்தா அணிந்த பெண்மணி ஒருவர் தனக்கு எதிரில் வரும் ஒருவரைப் பார்க்க நேரிடின், அவர் ‘நல்லவரா?’ அல்லது ‘கெட்டவரா?’ என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம்.

(இக்கட்டுரையாசிரியர் லைலா அஸ்கர், வெஸ்டர்ன் பிரிடடஜ் (Western Bridge) பள்ளி மாணவி. அமெரிக்காவின் ‘லாஸ் ஏன்ஜல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும் இது.

தமிழாக்கம்: டாக்டர், பீ. ஹாமிது அப்துல்லாஹ் அவர்கள்                                                    

Saturday, December 3, 2011

முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!

0 comments

 முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
முஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறையில் என்ன உள்ளதோ அல்லது ஆலிம்சாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக்கொள்வதை பார்க்கிறோம்.
சில  பகுதிகளில் முஹர்ரம10. அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திகா ஓதிவிட்டால் கடமை முடிந்தது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத்  குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை.
வேறு சில பகுதிகளில்  ஹுஸைன் [ரலி] அவர்கள் ஷஹீதானதை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற பெயரில், ஷியாக்களின் வழிமுறையான பஞ்சா எடுத்து, இந்துக்களின் வழிமுறையான தீ மிதிப்பதையும் முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இது தெளிவான வழிகேடாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக்  கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்." [புகாரி எண்; 1294 ]
முஹர்ரம் மாதத்தில் செய்யவேண்டியது என்ன என்று நபி[ஸல்] அவர்கள் நமக்கு தெளிவாக்கிவிட்டார்கள். நாம் செய்யவேண்டியது இரண்டு நோன்புகள் நோற்பது மட்டுமே நபிவழியாகும்;
நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர்;இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்,
ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி  ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)
ஆஷுரா நோன்பை ஆர்வமூட்டிய அல்லாஹ்வின் தூதர்; இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
"ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!" (புகாரி எண்; 2006)
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, 'இன்று ஆஷுரா  நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள்! [புகாரி எண்; 2007 ]
ஆஷுரா நோன்பு ரமளானுக்கு முன்னும்; பின்னும்;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா  நோன்பைவிட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர்விட்டுவிட்டனர். [புகாரி எண்; 2002 ]
எனவே, சகோதர/சகோதரிகளே! இரண்டு நோன்பை நோற்பதன் மூலம் இறை உவப்பை பெறுவோம். மேலும் அநியாயக்கார அரசனான ஃபிர்அவ்ன்
இடமிருந்து அல்லாஹ்வின் தூதர் மூஸா[அலை] அவர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் காப்பாற்றினான். அதுபோல் ஃபிர்அவ்னின் மறுவடிவமான அமெரிக்கா, இஸ்ரேல், சங்பரிவாரத்திடமிருந்தும், சக முஸ்லிம்களின் உயிர்- உடமை- மானத்தோடு விளையாடும் குழப்பவாதிகளிடமிருந்தும்  உலக முஸ்லிம்களை பாதுகாக்குமாறு அந்நாளில் துஆ செய்வோம்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

-முகவை எஸ்.அப்பாஸ்

வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல்

0 comments

வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல்


சமூக வலைதளங்கள் மூலம், பள்ளி, கல்லூரி மாணவியரை குறிவைத்து மோசடி செய்யும் வக்கிர கும்பல்களின் செயல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் மாணவியர் மட்டுமின்றி, பெற்றோரும் உஷாராக இருக்க வேண்டும்.
இன்றைய நவீன உலகில், மக்களின் அடிப்படை தேவைகளில், மொபைல்போன் மற்றும் இன்டர்நெட்டும் இடம்பிடித்துள்ளன. பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்களை நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள இன்டர்நெட் உதவுகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் சாதகம், பாதகம் இரண்டும் கலந்திருக்கும். அந்த வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை இன்டர்நெட் கொண்டுள்ள போதும், சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளவில் நடக்க இது முக்கிய காரணமாக உள்ளது.பிறருடன் பேசவும், எஸ்.எம். எஸ்., அனுப்பவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மொபைல்போன்கள், தற்போது இன்டர்நெட் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது; வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.பண்டிகை நாட்கள் மட்டுமின்றி, தினமும் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, அதன் மூலம் தங்களின் அன்பை பரிமாறி கொள்வதை வழக்கமாக கொண்டு பலர் செயல்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பு வயதினரிடமும் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) எஸ். எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு சமீபத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

"பேஸ்புக்' 'டிவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஒருவர் தங்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பதிவு செய்வதன் மூலம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு பகுதிகளிலுள்ள தங்களுடைய நண்பர்கள்,உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. இதன் காரணமாக மொபைல் போன்களிலிருந்து எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு பலர் "குட் பை' சொல்ல துவங்கிவிட்டனர்.சமூக வலைதளங்களில் தங்களின் விபரங்களை ஒருவர் பதிவு செய்யும் போது, தகவல்களுடன் சேர்த்து தங்கள் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். வலைதளங்கள் மூலம் ஒருவருடன் நண்பர்களாக வேண்டும் என்றால், தங்களின் விருப்பத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு குறுந்தகவலாக அனுப்ப வேண்டும்; மறுமுனையில் சம்பந்தப்பட்ட நபர் அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இருவரும் வலைதளத்தில் நண்பர்களாகி கொள்ளவும், தங்களின் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் முடியும்.உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள தங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடவும், உறவுகளை இணைக்கும் பாலமாகவும் உதவி வரும் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவியருக்கு எதிரான சைபர்கிரைம் குற்றங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

சமூக வலைதளங்களில் பெண்களின் பெயர்களை டைப் செய்தால், குறிப்பிட்ட பெயருக்கு 25க்கும் மேற்பட்டவர்கள் குறித்த முழு விபரங்கள் போட்டோக்களுடன் வெளியிடப்படுகின்றன. இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் ஆசாமிகள், அறிமுகமில்லாத பெண்களுக்கு தாங்களாகவே, "நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்' என தெரிவிக்கும் தகவல்களை அனுப்புகின்றனர். தங்களுக்கு தெரியாத நபர்கள் அனுப்பும் இத்தகைய வேண்டுகோளை ஏற்காமல் நிராகரிக்கும் பெண்கள் எவ்வித ஆபத்திலும் சிக்காமல் தப்பிவிடுகின்றனர். எனினும் தங்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும் பெண்களிடம் நல்லவர்களை போல் சில நாட்கள் நடித்து அவர்களின் மொபைல்போன் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்கின்றனர். நாளடைவில் நேரில் சந்திப்பது, பொது இடங்களுக்கு சென்று வருதல், பண பரிமாற்றம் என துவங்கி, ஏமாறும் அபலைப் பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றியும், அவர்களிடமிருந்து பணம்,நகை, "லேப்டாப்' உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தும் சென்றுவிடுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் பலர்,போலீசில் புகார் தெரிவிக்க முன்வருவதில்லை.

சைபர் கிரைம் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 
"கம்ப்யூட்டர்களில், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்தும்போது, அறிமுகமில்லாத நபர்களுடன் தொடர்பு வைத்து கொள்வதை பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். தங்களின் அந்தரங்க தகவல்கள் குறித்து நெருங்கிய தோழிகளுடன் கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது. பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் இணையதள பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். தனி அறையில் வைத்து அவர்கள் இணையதளங்களை இயக்க அனுமதிக்க கூடாது' என்றனர்.

பெற்றோர், ஆசிரியர், உடன்பிறப்புகள், உறவினர்கள் உள்ளிட்டவர்களின் அறிவுரை ஒருபுறமிருந்தாலும், இன்டர்நெட் பயன்படுத்தும்போது பெண்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.


டிஸம்பர் 6 - இதஜவின் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்கள்!

0 comments

டிஸம்பர் 6 - இதஜவின் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்கள்!


அல்லாஹ்வின் பள்ளியான பாபரி மஸ்ஜித் காவி கும்பல்களால் தகர்ப்பட்டு 19 வருடங்கள் வரும் டிஸம்பர் 6 அன்று நிறைவு பெறுகிறது. இப்பள்ளியினை மீ்ட்க வேண்டிய பல வித போராட்டங்களை நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது.
கடந்த நவம்பர் 19ஆம் தேதி மேலப்பாளையத்தில்  துவங்கிய பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை தமிழக அரசால் தடை செய்யப்பட்டது.
வரும் டிஸம்பர் 6ஆம் தேதி தமிழக எங்கும் நம் இந்திய தவ்ஹீத் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

டிசம்பர் - 6 போஸ்டர் மாதிரி! டிசம்பர் -6 கோஷங்கள் மாதிரி!

0 comments




டிசம்பர் - 6 போஸ்டர் மாதிரி! டிசம்பர் -6 கோஷங்கள் மாதிரி!


டிசம்பர் - 6  போஸ்டர் மாதிரி  


பிட்  நோட்டிஸ் 


டிசம்பர் -6 கோஷங்கள் மாதிரி
பெரிதாக்கி  படிக்க கிளிக் செய்யவும்.         


INTJ வின் ரத்த தான சேவையை பாராட்டி பதக்கம்! அரசு பொது மருத்துவ மனை விழாவில் அமைச்சர் விருது!

0 comments




INTJ வின் ரத்த தான சேவையை பாராட்டி பதக்கம்! அரசு பொது மருத்துவ மனை விழாவில்அமைச்சர் விருது!





INTJ வின் ரத்த தான சேவையை பாராட்டி பதக்கம்! 
அரசு பொது மருத்துவ மனை விழாவில் அமைச்சர் விருது!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மதங்களைக் கடந்த மனித நேய சேவையான இரத்த தான உதவிகளைப் பாராட்டி சென்னை அரசு ஸ்டான்லி மற்றும் RSRM மருத்துவமனைகள்  விருது வழங்கிய  செய்திகள்  கடந்த சிலநாட்களுக்கு  முன்  நமது  இணைய தலத்தில் வெளியிட்டிருந்தோம். இன்று 29.11.11  சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனை சார்பில் இன்று நடை பெற்ற விழா ஒன்றில் மாநில மருத்துவ அணி செயலாளர் கலிமுல்லாஹ் மாநில   அமைச்சர் கையில் பதக்கம் மற்றும் விருதுகளைப் பெற்றார்.
அவருடன் தென் சென்னை வட சென்னை 
மாவட்ட மருத்துவ அணி செயலாளர்கள்  சேப்பாக்கம்,
கிருஷ்ணம் பேட்டை , எம்.ஜி.ஆர்.நகர், சூளை மேடு  திருவல்லிக்கேணி உள்ளிட்ட கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு விருது மற்றும் பாராட்டுப் பத்திரங்களை பெற்றுக் கொண்டனர்.  

Sunday, November 6, 2011

அல்லாஹ்வின் அழைப்பு பணிக்காக ஆவடி இதஜ கிளையின் வேண்டுகோள்

0 comments


அல்லாஹ்வின் இறுதி வேதம் தனது 41வது அத்தியாத்தில் 33வது வசனத்தில் கீழ்காணும் முறையில் அழைப்பு பணி குறித்து வலியுறுத்துகிறது.
“மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, அழகான செயல்களை செய்து, தன்னை முஸ்லிம் என சொல்பவரை விட அழகிய வார்த்தை பேசியவர் யார்?”
இந்த அருமையான பணியினை கடந்த 3 வருடமாக செய்து வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆவடிக்கிளைக்கு பிரச்சார வாகனம் ஒன்று தேவைப்படுவதால் உங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


இஸ்லாமிய சமுதாயமே எச்சரிக்கை

0 comments
இஸ்லாமிய சமுதாயமே எச்சரிக்கை

அகில பாரதீய வித்யார்த்தி பரிசத் எனும் பெயரில் செயல்படும் நாசகர பாசிச காவி கூட்டத்தின்  மாணவ அமைப்பின் உழைப்பின் பலனை பாரீர்.இவர்கள் தான் கல்லூரியில் பயிலும் நம் சமுதாய மாணவிகளை வழிகெடுப்பது.ஸ்மார்ட் பிரென்ட் எனும் பெயரில் பாசிச வெறி நாய்களை நண்பர்களாக அறிமுகம் செய்துவைத்து நம் சகோதரிகளிடம் ஆசை வார்த்தைகளை தூண்டி வீட்டை விட்டு வெளியேற செய்து வழி கெடுப்பதுதான் இவர்களின் முக்கிய குறிக்கோள்.எச்சரிக்கை சகோதரர்களே.பெண்களை ரீசாஜ் கார்டு வாங்கி ரீசார்ஜ் செய்ய சொல்லுங்கள்.அல்லது வீட்டில் உள்ள ஆண்கள் ரீசார்ஜ் செய்து கொடுங்கள்.
ஈசி ரீசார்ஜ் செய்யும் கடைகளில் இருந்து ஈசி ரீசார்ஜ் செய்யும் நம் சமுதாய பெண்களின் நம்பரை எடுத்து முதலில் மெசேஜும் பின்பு மயக்கும் வார்த்தைகளை பேசியும் வழிகெடுக்கும் யுக்தியை தற்போது கையாளுகின்றனர்.எனவே தயவு செய்து ஈசி ரீசார்ஜ் செய்வதானால் ஆண்கள் சென்று செய்துகொடுங்கள்.
இப்புகைப்படங்கள் ராமேஸ்வரத்தில் நடந்த கடல் முற்றுகை  போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது.சங்க்பரிவார பாசிஸ்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் ராமேஸ்வரத்தில் கிடைத்த வெற்றி என தலைப்பிட்டு இதை தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர்.
அன்பு சகோதர, சகோதரிகளே!

நரமாமிச மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் தான் இந்த இழிநிலை.இவர்கள் இணை வைத்து விட்டார்கள் இவர்கள் இசுலாமியர் இல்லை என சொல்லுவதை விட்டு விட்டு இவர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார்?,இந்த நிலை ஏற்பட்டதற்கான காரணம் எது?இதன்   பின்னணி என்ன?என்பதனை சிந்திக்க வேண்டுகிறேன்.சங்கபரிவார பயங்கரவாதிகளின் நூற்றாண்டு செயல் திட்டத்தின் விளைவு தான் இது என்கிற உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இந்தியா இந்து தேசம்.நீ இங்கே வாழ வேண்டுமெனில் தொப்பி தாடியுடன் நாமும் இட்டுக்கொள்.அல்லாஹு அக்பர் என்பதுடன் ஜெய் ஸ்ரீராம் என்றும் சொல். அப்படியெனில் மட்டுமே நீ இந்த நாட்டில் மூன்றாம் தர குடிமகனாய்  வசிக்க முடியும் என்று பகிரங்கமாக  அறைகூவல் விடுத்து அதை செயல்படுத்தும் வெறியோடு பல பிரிவுகளாய் பிரிந்து ஆனால் ஒரே நோக்கத்திற்கு ஆர்.எஸ்.எஸ்.எனும் ஒரே தலைமைக்கு கட்டுப்பட்டு அதி தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள்.அரசு துறை அதிகார வர்க்கம்,ஆளும் வர்க்கம்மீடியாஇணையதளம் இப்படி எல்லா வகையிலும் செயல்பட்டு வருகின்றனர்.
நமக்கோ இயக்க சண்டை போடவும்அடுத்தவர்களின் குறைகளை கண்டறிந்து அதை பரப்புவதுபல பிரிவுகளாய் பிரிந்து செல்லவுமே நேரம் சரியாக இருக்கிறது. ஏதோ இது அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கவில்லை.சமிப காலமாய் இது அதிகரித்து வருகிறது.தமிழகத்திலும் கூட பழனி,சபரி மலைக்கு பாதயாத்திரை செல்வதுவிநாயகர் சதுர்த்தி அன்று வரவேற்பு செய்வதுநம் பெண்கள் ஹிந்து சமூகத்தை சேர்ந்தவருடன் வீட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மோடியை அடுத்த பிரதமராக முன்னிறுத்த  பாஜக தயாராகிவிட்டது. பிரசாரமும்  சமூக வலைத்தளங்கள் மூலம் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நமது நிலையோ சொல்லி தெரிய வேண்டியதில்லை. நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
போலி ஒற்றுமையோ நிஜ ஒற்றுமையோ தயவு செய்து ஒன்று சேருங்கள். சமுதாய நலனுக்கு என்று  சொல்லி சொல்லியே பல பிரிவுகளாய் பிரிந்து  இந்த சமுதாயம் பலவீனப்பட்டு போனது தான் மிச்சம்.
இயக்கவாதிகளே இயக்க மாயையிலிருந்து மீளுங்கள். சமுதாய நலன் நாடும் நல்லுள்ளங்களே   இயக்க தலைமைகளிடம் ஒன்று பட வற்புறுத்துங்கள். வலியுறுத்துங்கள்.
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாகஅல் குர்ஆன் 14:41.

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும்அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)

இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.
நன்றி- மசூதா பேகம்


இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு

0 comments
இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு

பழம் பெருமை மிக்க ஏக இறைவனின் இறையில்லம் பாபரி மஸ்ஜித்தை மீட்க புதிய யுக்தியை மேற் கொண்டு வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத யாத்திரைக்கு விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், யாதவ மகாசபை ஆகிய கட்சிகள் ஆதரவு தர முன் வந்துள்ளது. 
அல்ஹம்துலில்லாஹ்!
இன்று (03.11.2011) நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இதஜ தலைவர் S.M.பாக்கர் தெரிவித்தார்.

இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை நோட்டிஸ் மாதிரி

0 comments

இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு  ரத யாத்திரை நோட்டிஸ் மாதிரி