அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Thursday, September 22, 2011

பரமக்குடி கலவரத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இ.த.ஜ.நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல்!

0 comments
பரமக்குடி கலவரத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு 
இ.த.ஜ.நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல்!

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று தமிழக காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். பல தாழ்த்தப்பட்ட  சகோதரர்கள் காயமடைந்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து  அரசியல் கட்சிகளும் , சமுக அமைப்புகளும் பாதிககப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய போது இஸ்லாமிய அமைப்புகள் வழக்கம் போல் இதிலும் மவுனம் காத்தனர்.

பல் சமய இன மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒரு சமுகம் பாதிக்கப் படும போது  மற்ற சமூகங்கள் ஓடோடி சென்று உதவ வேண்டும். குறைந்த பட்சம் ஆறுதல் சொல்ல வேண்டும். அப்போது தான் நாம் பாதிக்கப் படும போது தான் நமக்காக ஓடோடி வருவார்கள் . ஏற்கனவே முஸ்லிம்கள்  தங்கள் விசயங்களுக்கு 
மட்டுமே கவலை படுவார்கள்.பொதுவான பிரச்சனைகளை கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் குற்ற சாட்டு உள்ளது. ஆனால் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை பொறுத்த வரையில் யார் பாதிககப் பட்டாலும் குரல் கொடுக்கும் என்பதை பல் வேறு சந்தர்ப்பங்களில் நிருபித்துள்ளது.

அந்த அடிப்படையில் பரமக்குடி கலவரத்தால் பாதிககப் பட்டவர்களை நேற்று முன்தினம் மதுரை மருத்துவ மனையில் சென்று எஸ்.எம்.பாக்கர்., முனீர், மதுரை மாவட்ட தலைவர் ராஜா முஹம்மத் 

ஆகியோர் அடங்கிய குழு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். 

ஜெயலலிதா மற்றும் மோடியின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து இன்று தடையை மீறி ஆர்பாட்டம்!

0 comments

ஜெயலலிதா மற்றும் மோடியின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து இன்று தடையை மீறி ஆர்பாட்டம்!


உலக அமைதிக்காக உண்ணாவிரதம் எனும் கபட நாடகத்தை அரங்கேற்றும் மோடியையும் அவருக்கு ஆதரவளித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்த ஜெயலலிதாவின் முஸ்லிம் விரோதப் போக்கையும் கண்டித்து இன்று தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தியது.
இதில் ஏரளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பங்கேற்றனர். ஒரே நாளில் முடிவு செய்து போஸ்டரோ பிட் நோட்டிசோ இன்றி வெறும் எஸ்.எம்.எஸ். மூலம் திரட்டப்பட்டு நடை பெற்ற இந்த போராட்டம் அல்லாஹ்வின் அருளால் அனைத்து ஊடகங்களிளிலும் முக்கிய செய்தியானது.
மோடிக்கு முஸ்லிம்கள் ஆதரவு என ஊடகங்களால் ஒரு பரப்பப் பட்டுக் கொண்டிருக்கும் போது ' எந்த முஸ்லிமும மோடியை ஆதரிக்க மாட்டான்' எனும் செய்தியை எடுத்து சொல்ல   போராட வேண்டிய தமிழக இயக்கங்கள் இந்த விசயத்தை கண்டு கொள்ளவில்லை என்பதும், 'நாங்கள் ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் பத்தாயிரம் பேரைக் கூட்டுவோம்' என்ற இயக்கங்கள் எல்லாம் போஸ்டரில்  எதிர்ப்பை தெரிவித்து முடித்துக் கொண்ட நிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைதாவோம் எனும் நிலையில் இந்தப் போராட்டத்தை நடத்தியது அனைத்து தரப்பின் பாராட்டுதலை பெற்றுள்ளது.
மேலும் லட்சக் கணக்கில் மக்களை திரட்டி கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கும் நிகழ்சிகளுக்கு  கிடைக்காத ஊடக வெளிச்சம் இந்த போராட்டத்திற்கு கிடைத்தது  அல்லாஹ் என்னத்திற்கு தான் வெற்றியை தருகிறான் எண்ணிக்கைக்கு அல்ல என்பதும் நமக்கு புரிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆலந்தூரில் நடைபெற்ற இதஜ'வின் பரிசளிப்பு நிகழ்ச்சி!

0 comments

ஆலந்தூரில் நடைபெற்ற இதஜ'வின் பரிசளிப்பு நிகழ்ச்சி!

ஆலந்தூரில் நடைபெற்ற இதஜ'வின் பரிசளிப்பு நிகழ்ச்சி!

0 comments

ஆலந்தூரில் நடைபெற்ற இதஜ'வின் பரிசளிப்பு நிகழ்ச்சி!