அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Tuesday, January 22, 2013

திருப்பூரில் பெண்களுக்காண மார்க விளக்க பொதுக்கூட்டம்

0 comments








இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் இராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக மாபெரும் பெண்களுக்காண மார்க விளக்க பொதுக்கூட்டம் 20/01/2013அன்று மாலை 6.30மணிக்கு நடைப்பெற்றது.சகோதரி பெமினா ஆலிமா அவர்கள் தலைமை வகித்தார்.சகோதரி  ரியாஜ் பாத்திமா வரவேற்புரை ஆற்றினார். மாநில பேச்சாளர் சகோதரி A.பரக்கத் நிசா அவர்கள் இஸ்லாமிய பெண்கள் அன்றும்? இன்றும்? என்ற தலைப்பில் இஸ்லாமிய பெண்கள் அன்று எவ்வாறு வாழ்ந்தார்கள் இன்றைய இஸ்லாமிய பெண்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று இன்றைய பெண்களுக்கு மத்தியில் உலாவரும் தவறான கலாச்சாரத்தை கண்டித்து உரை நிகழ்த்தினார்.பெண்கள் பெரும் திரளாக கலந்து கொண்டணர்.ஆண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.பெண்களுக்

காக பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் பொதுக்கூட்டம் இது போன்று ஏராளமான பணிகளை செய்ய வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக....இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்ட மாணவரணி

Tuesday, January 8, 2013

நீதி கேட்டு நெடும் பயணம் ஏன் ஏதற்கு-?விளக்க தெருமுனைக் கூட்டம்

0 comments

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக இஸ்லாமிய விளக்க தெருமுனைக்கூட்டம் 04/01/2013 அன்று அண்ணா பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்றது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் காஞ்சி மாவட்ட தலைவர் M.முஹம்மது ஹனிப் தலைமை வகித்தார். ஆயிஷா சித்தீக்கா மதரஸா மாணவர் J.சித்தீக் குர்ஆன் வசனத்தை ஒதி நிகழ்சியை தொடங்கி வைத்தார்.சமூகத் தீமைகள் என்னும் தலைப்பில் பேசிய சகோதரி A.பரக்கத் நிசா அவர்கள் இன்றைய காலகட்டத்தில் மலிந்து காணப்படும் மது,புகையிலைக்கு எதிராக குரல் எழப்பினார்.இன்று மது,புகையினால் எத்தனை குடும்பங்கள் கஷ்டப்படுகின்றது,இதனால் ஆண்டிற்கு எவ்வளவு உயிர்இழப்பு எற்படுகிறது என்பதை புள்ளி விவரத்துடன் எடுத்துரைத்தார்.மேலும் நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு  காரணம் இந்த மது தான் ஆகவே தமிழக அரசு பூரன மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் இல்லையனில் நடக்கும் குற்றங்கள் குறையாது என்றும் விளக்கி பேசினார்.அடுத்து பேசிய திருவள்ளுர் மாவட்ட தலைவர் வேலுர் இப்ராஹீம் பாலியல் வன்கொடுமைக்கு தீர்வு என்ன?என்ற தலைப்பில் பேசினார் டெல்லியில் நடந்தபாலியல்கொடுமைக்கு பின் இன்று வரைக்கும்  எவ்வளவு

கொடுமைகள் நடந்திருக்கிறது என்று புள்ளி விவரத்துடன் விளக்கினார்..மேலும் இன்றைக்கு பல அரசியல்வாதிகள் இந்த வன்கொடுமைக்கு சொல்லும் தண்டணைகளையும் இஸ்லாம் கூறும் தண்டணைகளையும் ஒப்பிட்டு பேசினார்.                                                                                                                     இஸ்லாம் கூறும் சட்டம்

இந்தியாவில்நடைமுறைப்படுத்தாத வரை குற்றங்கள் குறையாது என்றும். இஸ்லாமிய சட்டம் தான் சிறந்த சட்டம் என்பதை தனது ஆனிதனமான பேச்சில் அனைத்து மக்களும் எளிதாக புரிந்து கொள்கிற அளக்கு  எளிமையாக எடுத்துரைத்தார்,அடுத்து பேசிய மாநிலப் பேச்சாளர் அலிம் அல்-புகாரி நீதி கேட்டு நெடும் பயணம் ஏன் ஏதற்கு? என்ற தலைப்பில் தனக்கே உரிய வீரமான பேச்சில் எடுத்துரைத்தார்.இன்றைக்கு தமிழ் நாட்டில் நீதி கேட்டு எந்த சமுதாயமும் சென்றதில்லை.ஆனால் இன்றைக்கு முஸ்லிம் சமுதாயம் நீதி கேட்டு நெடும் பயணம் செல்கிறது அந்த அளவுக்கு முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் நீதி மறுக்கப்படுகிறது.ஒரு காலத்தில் நாட்டையே ஆட்சி செய்த சமுதாயம்  இன்றைக்கு நாதி அற்று நிற்க்கிறது.இன் இந்த அவல நிலை என் இந்த பராபட்சம் முஸ்லிம்களின் நிலை மாற வீரு கொண்டு எழந்து வா நீதி கேட்டு நெடும் பயணத்திற்கு என்று முஸ்லிம்களின் லட்சிய பயணத்திற்கு அழைப்பு விடுத்தார்.அத்துடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இனிதே நிறைவுப்பெற்றது.ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டணர் அல்ஹம்துலில்லாஹ்

INTJ காஞ்சி மாவட்ட மாணவரணி





                                                        உரையாற்றும் பரக்கத் நிசா


                        உரையாற்றும் மாநில பேச்சாளர் வேலூர் இப்ராஹீம்



                         உரையாற்றும் மாநில பேச்சாளர் அலிம்அல்-புகாரி



    தீர்மானம் வாசிக்கும் காஞ்சி மாவட்ட தலைவர் முஹம்மது ஹனிப்