அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Friday, October 14, 2011

மறக்க மாட்டோம் டிசம்பர் ஆறை! அணைக்க மாட்டோம் போர் நெருப்பை!

0 comments



மறக்க மாட்டோம் டிசம்பர் ஆறை
அணைக்க மாட்டோம் போர் நெருப்பை!  





நூறு ஆண்டுகள் நிலைத்து நின்றேன்!
என்னுள் நீங்கள் அல்லாஹ்வைத் தொழுது வந்தீர்கள்..
வரலாறாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
அமைதியாக நின்று கொண்டிருந்த என் மேல்
சில கழுகுப் பார்வைகள் விழத்தொடங்கின.
என்னை இந்தியாவின் அவமான சின்னம் என்றார்கள்,
நான் களங்கப் படுத்தபட்டேன்
என்னை இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள்!
நான் ஷஹீது ஆக்கபட்டேன்....
அல்லாஹுவைத் துதித்து வந்த என் இடத்தின்மேல்
காவிகளின் களியாட்டம் நடக்குதே!

ஓ, இந்திய முஸ்லிமே! நான் இந்தியாவின்
நினைவுச் சின்னம் மட்டும் அல்ல;
நான் ஜனநாயக இந்தியாவின் இதயம்...
என்னை நீ இழந்துவிடத் துணிந்துவிட்டால்
இந்தியா இன்னும் பல இறையில்லங்களை இழந்துவிடும்.
என்னை நீ மறந்து விட்டால் ...
நீயும் மறக்கடிக்கப்படுவாய்!
ஓ, இந்திய முஸ்லிமே! நீ தூங்கிவிட்டால்
எதிரிகள் விழித்து கொள்வார்கள்
நீ உன் பணியை நிறுத்திக் கொண்டால்
நான் அவமானச் சின்னம் என்ற பொய்யை
உண்மை ஆக்கிவிடுவார்கள்.
ஓ! இந்திய முஸ்லிமே!
என்னுடைய அழுகை சப்தம்
உன் செவிகளை எட்டவில்லையா?
அநியாயக்காரர்களின் பிடியிலிருந்து
என்னை நீ மீட்டு எடுக்கும் காலம் எப்பொழுது?
oOo

ஓ,பாபரியே! உன் அழுகை சப்தம்
எங்கள் காதுகளில் விழுகிறது
நாங்கள் எங்களை வருத்தி, உன் கண்ணீரைத் துடைப்போம்!
எங்கள் உதிரத்தைச் சிந்தி, உன் மினாராவை எழுப்புவோம்!
எங்களை மண்ணில் புதைத்து, உன்னைக் கட்டி எழுப்புவோம்!
இன்னும் கொஞ்ச காலத்தில், இன்ஷா அல்லாஹ்!


- திருவை அன்ஸர், நன்றி சத்ய மார்க்கம் 





மறக்க மாட்டோம் டிசம்பர் ஆறை
அணைக்க மாட்டோம் போர் நெருப்பை!  
பாபரி பள்ளியை இடிக்க RSS BJP 
மேற் கொண்டது ரத்த யாத்திரை 
பாபரி பள்ளியை மீட்க
 INTJ ரத யாத்திரை !

இன்ஷா அல்லாஹ் 
19.11.11 to 06.11.11   
மேலப் பாளையம் முதல்
 சென்னை சென்ட்ரல் வரை  

Tuesday, October 4, 2011

மக்கள் கூடும் இடங்களில் மார்க்கப் பிரசாரம். INTJ வின் அற்புத அழைப்புப் பணி!

0 comments




மக்கள் கூடும் இடங்களில் மார்க்கப் பிரசாரம். INTJ வின் அற்புத அழைப்புப் பணி!



இஸ்லாமிய இயக்கங்கள் எல்லாம் உள்ளாட்சி தேர்தல் வோட்டுகளுக்காக தெருத் தெருவாக தேர்தல் பிரசாரம் செய்து கொண்டு இருக்கையில் அழைப்புப் பணியே தான் முழு முதல் பணியாக கொண்டுள்ள இதஜ தன்னுடைய பணியை தெளிவாக  செய்து கொண்டுள்ளது.
கோவில் நகரமான குன்றத்தூரில் தனது அழைப்புப் பணியை சிலை வணக்கத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு எடுக்கும் முகமாக சமூகத் தீமைகளை எதிர்க்கும் விதமாக தன்னுடைய தாஃவாவை எடுத்து வைக்கும் பணியை கோவில்களுக்கு அருகிலேயே நின்று பிரசாரம் செய்தது ஜமாத்தின் உறுதியை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்தது..









  படம் ;தருவையார்