அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Friday, December 6, 2013

டிசம்பர்-6 மாபெரும் கண்டண ஆர்பாட்டம்

0 comments

அல்லாஹ் அக்பர்!!இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் சார்பாக டிசம்பர்-6 பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி மாபெரும் கண்டண ஆர்பாட்டம் பல்லாவரத்தில் நடைப் பெற்றது...மாநில செயலாளர் ஜாகிர் உசேன் இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அலாவுதின் ஆகியோர் உரை நிகழ்தினர்...ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டணர்...மாநில செயளாலர் மைதீன் கண்டண உரை நிகழ்தினார்..இதில் இயக்க வேறுபாடு இல்லாமல் அல்லாஹ்வின் ஆலையத்தை மீட்க குரல் கொடுப்போம் என்று பல சகோதரர்கள் கலந்து கொண்டணர் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக..இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டு இன்னும் வீரியமீக்க போராட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் கையில் எடுக்கும்...பாபர் பள்ளி இடத்தை மீட்கும் வரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிர்வு அலை அடித்து கொண்டிருக்கும்....அல்லாஹ் வெற்றியை தருவான்..........காஞ்சி மாணவரணி






Thursday, April 11, 2013

தாகம் தீர்த்து தஃவா செய்யும் குன்றத்தூர் INTJ!

0 comments








இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளை சார்பாக கடந்த புதன்கிழமை (3-4-13) அன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

எக்களத்தையும் தஃவா களமாக மாற்றும் INTJ, தண்ணீர் பந்தல் திறப்போடு
நிறுத்தி விடாமல், மாமறை போதனைகளையும், மாநபி வழிகாட்டுதலையும் விளக்கி, பந்தலை சுற்றி பேனர் வைத்து, தண்ணீர் அருந்த வரும் முஸ்லிமல்லாத மக்கள் அதை படித்து, இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளது..
இன்னும் இத்தஃவாவின் சிறப்பம்சம் என்னவென்றால், இத்தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வை கூட தஃவா வாக மாற்றியது தான். இத்தண்ணீர் பந்தலை தொடங்கி வைக்க வந்த INTJ மாநில செயலாளர் கே.பி.எம். முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் முஸ்லிமல்லாத மக்களுக்கு மத்தியில் இஸ்லாம் கூறும் ஓரிறை கொள்கை மற்றும் மனித நேயத்தை விளக்கி பந்தல் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் நின்று விளக்கியது, அப்பகுதியில் உள்ள முஸ்லிமல்லாத மக்களை வெகுவாக கவர்ந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
.காஞ்சி மாவட்ட மாணவரணி

Monday, March 4, 2013

நீதி கேட்டு நெடும்பயணம் சேலம்

0 comments


 நீதி கேட்டு நெடும்பயணம் 3வது நாளாக சேலம் மாநகர் முழுவதும் தனது பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அவர்களுக்கு மத்தியில் முக்கியமான ஐந்து கோரிக்கைகளை விளக்கி விழிப்புணர்வை எற்படுத்தியது.மாலை 7மணி அளவில் சேலம் முஹம்மது புறாவில் மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் புரைதா இஸ்மாயில் தலைமையில் நடைப்பெற்றது.மாநில பேச்சாளர் ஆனைமலை ஆஷிப் மாநில பேச்சாளர் K.P.M முஹம்மது மைதீன் மாநில பொதுச் செயலாளர் S.M சையத் இக்பால் தேசிய தலைவர் S.M பாக்கர் ஆகியோர் நீதி கேட்டு நெடும்பயணத்தின் ஐந்து முக்கிய கோரிக்கைகளை விளக்கி கூறினர்.மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டணர்.அல்ஹம்துலில்லாஹ்... 4வது நாள் நீதி கேட்டு நெடும்பயணம் ஈரோடு கோவை இன்ஷா அல்லாஹ் தொடரும்  காஞ்சி மாவட்ட மாணவரணி






Tuesday, February 19, 2013

நீதி கேட்டு நெடும்பயணம்பெரியகுளம் பொதுக்கூட்டம்

0 comments
                                                வி.சி.க.இ.அணி த‌லைவர் மது
                                                               வி.சி.க.ரஃபிக்
                                                  மாநில பேச்சாளர் மைதீன்
                                                 மாநில செயளாலர் சீத்தீக்



இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் நீதி கேட்டு நெடும்பயணம் 6வது நாளாக இன்று திண்டுக்கல் மாவட்டத்தை வலம் வந்து தேவதானபட்டியில் நீதியை கேட்டு தெருமுனை கூட்டத்தை நடத்தி விட்டு கடைசியாக பெரியகுளம் பகுதி முழுவதும் நீதி கேட்டு நெடும்பயண சுற்றுபயணத்தை முடித்துவிட்டு இறுதியாக பெரியகுளம் பகுதியில் வடகரை பழைய பஸ்டாண்ட்   அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் பிரம்மான்டமாக நடைப்பெற்றது.மாநிலப் பேச்சாளர் K.M முஹம்மது மைதீன் மாநில செயலாளர் சித்தீக் மற்றும் நமக்கு எந்த காலகட்டத்திலும் சகோதர வாஞ்சையுடன் பயணிக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் தேனி மாவட்ட துனைச் செயலாளர் ரஃபிக் மற்றும் தேனி மாவட்ட இளைஞர் அணி தலைவர் மது ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.இறுதியாக தேசிய தலைவர் அனல் பறக்கும் உரை நிகழ்தினார்.மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டணர்......அதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி மாவட்ட நிர்வாகிகள் சகோதரர் S.M பாக்கர் அவர்களுக்கு சால்வை அணிவதற்கு அனுமதி கேட்டனர் அதற்கு தேனி மாவட்ட செயலாளர் சகோதரர் ராஜா முஹம்மது அவர்கள் பொதுக்கூட்ட மேடையில் சால்வை போட கூடாது அதை எங்கள் தலைவர் எற்க மாட்டார்.. மரியாதை மனதில் இருந்தால் போதும் என்று பகிரங்கமாக கூறினார்.பொதுக்கூட்ட மேடைகளில் தலைவர்களை புகழ்ந்து தள்ளுவதர்காகவே சிலர் கூட்டம் நடத்துகின்றனர்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையில் உறுதி,சமுதாயத்தில் இனக்கம் என செயல்படும் அல்ஹம்துலில்லாஹ்.காஞ்சி மாவட்ட மாணவரணி

Monday, February 4, 2013

நீதி கேட்டு நெடும்பயணம்

0 comments




இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நீதி கேட்டூ நெடும்பயணத்தை ஆறாவது நாளான இன்று திண்டுக்கள் பெரியகுளம் தேனி போன்ற இடங்களில் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் முன்பு உள்ள தேவதானபட்டியில் நீதி கேட்டு நெடும் பயண பிரச்சார கூட்டம் நடைப்பெற்றது.அதில் சகோதர் S.M பாக்கர் அவர்கள் உரை நிகழ்த்தினார் சமுதாய சொந்தங்கள் அனைவரும் இயக்கம் பாராமல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.தேவாதான ஜமாஅத் தலைவர் அப்துல் கவாத் காண் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தலைவரை வரவேற்று சால்வை அணிவித்து சிறப்பித்தார் அல்ஹம்துலில்லாஹ் இஸ்லாமிய ஒற்றுமை ஓங்கட்டும்.காஞ்சி மாவட்ட மாணவரணி
 (5 photos)

Tuesday, January 22, 2013

திருப்பூரில் பெண்களுக்காண மார்க விளக்க பொதுக்கூட்டம்

0 comments








இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் இராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக மாபெரும் பெண்களுக்காண மார்க விளக்க பொதுக்கூட்டம் 20/01/2013அன்று மாலை 6.30மணிக்கு நடைப்பெற்றது.சகோதரி பெமினா ஆலிமா அவர்கள் தலைமை வகித்தார்.சகோதரி  ரியாஜ் பாத்திமா வரவேற்புரை ஆற்றினார். மாநில பேச்சாளர் சகோதரி A.பரக்கத் நிசா அவர்கள் இஸ்லாமிய பெண்கள் அன்றும்? இன்றும்? என்ற தலைப்பில் இஸ்லாமிய பெண்கள் அன்று எவ்வாறு வாழ்ந்தார்கள் இன்றைய இஸ்லாமிய பெண்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று இன்றைய பெண்களுக்கு மத்தியில் உலாவரும் தவறான கலாச்சாரத்தை கண்டித்து உரை நிகழ்த்தினார்.பெண்கள் பெரும் திரளாக கலந்து கொண்டணர்.ஆண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.பெண்களுக்

காக பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் பொதுக்கூட்டம் இது போன்று ஏராளமான பணிகளை செய்ய வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக....இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்ட மாணவரணி

Tuesday, January 8, 2013

நீதி கேட்டு நெடும் பயணம் ஏன் ஏதற்கு-?விளக்க தெருமுனைக் கூட்டம்

0 comments

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக இஸ்லாமிய விளக்க தெருமுனைக்கூட்டம் 04/01/2013 அன்று அண்ணா பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்றது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் காஞ்சி மாவட்ட தலைவர் M.முஹம்மது ஹனிப் தலைமை வகித்தார். ஆயிஷா சித்தீக்கா மதரஸா மாணவர் J.சித்தீக் குர்ஆன் வசனத்தை ஒதி நிகழ்சியை தொடங்கி வைத்தார்.சமூகத் தீமைகள் என்னும் தலைப்பில் பேசிய சகோதரி A.பரக்கத் நிசா அவர்கள் இன்றைய காலகட்டத்தில் மலிந்து காணப்படும் மது,புகையிலைக்கு எதிராக குரல் எழப்பினார்.இன்று மது,புகையினால் எத்தனை குடும்பங்கள் கஷ்டப்படுகின்றது,இதனால் ஆண்டிற்கு எவ்வளவு உயிர்இழப்பு எற்படுகிறது என்பதை புள்ளி விவரத்துடன் எடுத்துரைத்தார்.மேலும் நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு  காரணம் இந்த மது தான் ஆகவே தமிழக அரசு பூரன மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் இல்லையனில் நடக்கும் குற்றங்கள் குறையாது என்றும் விளக்கி பேசினார்.அடுத்து பேசிய திருவள்ளுர் மாவட்ட தலைவர் வேலுர் இப்ராஹீம் பாலியல் வன்கொடுமைக்கு தீர்வு என்ன?என்ற தலைப்பில் பேசினார் டெல்லியில் நடந்தபாலியல்கொடுமைக்கு பின் இன்று வரைக்கும்  எவ்வளவு

கொடுமைகள் நடந்திருக்கிறது என்று புள்ளி விவரத்துடன் விளக்கினார்..மேலும் இன்றைக்கு பல அரசியல்வாதிகள் இந்த வன்கொடுமைக்கு சொல்லும் தண்டணைகளையும் இஸ்லாம் கூறும் தண்டணைகளையும் ஒப்பிட்டு பேசினார்.                                                                                                                     இஸ்லாம் கூறும் சட்டம்

இந்தியாவில்நடைமுறைப்படுத்தாத வரை குற்றங்கள் குறையாது என்றும். இஸ்லாமிய சட்டம் தான் சிறந்த சட்டம் என்பதை தனது ஆனிதனமான பேச்சில் அனைத்து மக்களும் எளிதாக புரிந்து கொள்கிற அளக்கு  எளிமையாக எடுத்துரைத்தார்,அடுத்து பேசிய மாநிலப் பேச்சாளர் அலிம் அல்-புகாரி நீதி கேட்டு நெடும் பயணம் ஏன் ஏதற்கு? என்ற தலைப்பில் தனக்கே உரிய வீரமான பேச்சில் எடுத்துரைத்தார்.இன்றைக்கு தமிழ் நாட்டில் நீதி கேட்டு எந்த சமுதாயமும் சென்றதில்லை.ஆனால் இன்றைக்கு முஸ்லிம் சமுதாயம் நீதி கேட்டு நெடும் பயணம் செல்கிறது அந்த அளவுக்கு முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் நீதி மறுக்கப்படுகிறது.ஒரு காலத்தில் நாட்டையே ஆட்சி செய்த சமுதாயம்  இன்றைக்கு நாதி அற்று நிற்க்கிறது.இன் இந்த அவல நிலை என் இந்த பராபட்சம் முஸ்லிம்களின் நிலை மாற வீரு கொண்டு எழந்து வா நீதி கேட்டு நெடும் பயணத்திற்கு என்று முஸ்லிம்களின் லட்சிய பயணத்திற்கு அழைப்பு விடுத்தார்.அத்துடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இனிதே நிறைவுப்பெற்றது.ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டணர் அல்ஹம்துலில்லாஹ்

INTJ காஞ்சி மாவட்ட மாணவரணி





                                                        உரையாற்றும் பரக்கத் நிசா


                        உரையாற்றும் மாநில பேச்சாளர் வேலூர் இப்ராஹீம்



                         உரையாற்றும் மாநில பேச்சாளர் அலிம்அல்-புகாரி



    தீர்மானம் வாசிக்கும் காஞ்சி மாவட்ட தலைவர் முஹம்மது ஹனிப்