அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Sunday, December 12, 2010

இதஜ அபகரிப்புக்கும் ததஜவுக்கும் சம்மந்தமில்லை; பீஜேயின் பித்தலாட்டத்தை படம்பிடித்துக் காட்டும் உணர்வு!

0 comments

பாக்கரின் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை கைப்பற்றும்  நோக்கில், கள்ளத்தனமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் பதிவு செய்து உரிமை கொண்டாடும் பீஜே, அந்த களவாணித்தனத்தை  நியாயப்படுத்த, மக்களை ஏமாற்ற, இதஜ பெயரை கைப்பற்றியதை  சரிதான் என வாதிட சில வியாக்கியானங்களை முன்வைத்தார். அவைகளில் சில மீண்டும் உங்கள் நினைவுக்கு;

யாராவது இந்த ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரையும் பதிவு செய்ய வேண்டும் என்று பாக்கர் நீக்கப்படுவதற்கு முன் முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.



இவ்வளவுக்கும் பிறகு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்று செயல்படுவதாக் இருந்தால் இதை யாராவது பதிவு செய்துள்ளார்களா? ஏற்கனவே இது பற்றி பேசப்பட்டுள்ள போது இதற்காக யாராவது முயற்சிப்பார்களே என்ற குறைந்த பட்ச பொது அறிவும் இவர்களுக்கும் மழுங்கி விட்டது.



ஆனால் நாங்கள் அப்போதே இதற்கான முயற்சியில் இறங்கி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை சட்டப்படி சங்கப்பதிவு சட்டப்படி பதிவு செய்து விட்டோம்.. ஆனாலும் நாம் அதை சில காரணங்களுக்காக வெளிப்படுத்தாமல் இருந்தோம். என்றார் பீஜே

இந்த வாதத்திற்கு நாம்,  முன்பே பதிவு செய்துவிட்டோம் என்று சொல்லும் இந்த பொய்யர்கள் வெளியிட்டுள்ள சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட காலம் மார்ச் 2010 என்று உள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா? என்று கேட்டவுடன் பல்டியடித்து 8 மாதம் முன்புதான் பதிவு செய்தோம் என்று ஒப்புக்கொண்டு அசடு வழிந்தார் பீஜே.



அதோடு,
இதஜவின் மார்க்க முரணான[!] செயல்பாடுகள் ததஜ விற்கு  இழுக்கை தேடித் தருவதாகவும், இதஜ சார்பில் வெளியிடப்படும் அறிக்கைகள்  பத்திரிக்கையில் தவ்ஹீத் ஜமாஅத் என்று வெளியாவதாகவும்,
''சிலை திறப்பு விழாவில் தவ்ஹீத் ஜமாஅத் மானிலத் தலைவர் கலந்து கொண்டார் என்று செய்தி பத்திரிக்கையில் வெளியானது என்றெல்லாம்  துணிந்து பொய் சொன்னார் பீஜே
.
 
இவ்வாறு அவர் விட்டு அடித்ததற்கு காரணம், இதஜாவின் தவ்ஹீத் விரோத செயல்பாடுகளை தாங்க முடியாமல்தான், ததஜ அந்த பெயரை பதிவு செய்தது என்று தனது களவாணித்தனத்திற்கு  கொள்கை முலாம் பூசினார். அதோடு இந்த களவாணித்தனத்தை ததஜ செய்ததுபோல் காட்டினார். அவரை பின்பற்றும்  மக்களும்  ததஜ, இதஜவை அபகரித்தது கொள்கைக்காகவே என்று நம்பி, பீஜேயின் மோசடிக்கு ஒத்து ஊதினர். ஆனால் ததஜ இந்த விஷயம்  குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் சொல்லாதது நமக்கு ஒரு நெருடலை தந்தது.
 
இந்த நேரத்தில் பீஜேயின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக, அவரது மோசடி செயலுக்கு  நடுநிலையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்ததோடு, பாக்கருக்கு அதரவு பெருகுவதையும், பீஜேயின் அபகரிப்பு செயல் ததஜவுக்கு பின்னடைவை தந்ததையும் உணர்ந்த உணர்வு, இதஜ அபகரிப்புக்கும் ததஜவுக்கும்  சம்மந்தமில்லை என்ற ரீதியில் 'நாடும் நடப்பும்' என்ற பகுதியில் ஒரு செய்தியை பதிவு செய்துள்ளது.
 
''[ஜாபர் சொல்வதாக] நாங்க  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை சந்திச்சு, இவங்கள [இதஜவை] அடக்கணும், சும்மா விடக்கூடாதுன்னு சொன்னோம். ஆனா அவங்க கண்டுக்காததால்தான் இந்த முடிவை எடுத்து  நாங்க உடனடியா இந்திய தவ்ஹீத் ஜமாத்துன்னு சங்கப் பதிவு ஆபிசுல போய் முறைப்படி ரிஜிஸ்டர் செஞ்சு வீரியமா செயல்படலாம்னு வேலை பாத்துக்குட்டு இருக்கிறோம். அதக்கூட இப்ப செய்யல. ஜனவரி  மாசத்தில இருந்து ஆரம்பிச்சு செயல்பட்டு வர்றோம்! மார்ச் மாதம்தான் ஒரிஜினல் சர்டிபிகேட்டு கெடச்சுச்சு.''[உணர்வு நவம்பர் 19 -25 . பக்கம் 20 ]
 
அன்பு சகோதரர்களே! உணர்வின் இந்த செய்தி சொல்லுவது  என்ன? இதஜவை அடக்கவேண்டும் என்று சிலர் சொன்னபோது ததஜ கண்டுக்கவில்லை என்றும் அதற்கு பிறகுதான் சில நபர்கள் இதஜ பெயரை பதிவு செய்ததாகவும்  தெளிவாகவே  சொல்கிறது. இதன்  மூலம் இதஜவை கள்ளத்தனமாக பதிவு செய்தது ததஜ அல்ல என்பதும், பீஜேயின் தனிப்பட்ட கைங்கர்யம் தான் இதஜ பெயர் பதிவு என்பதும் தெளிவாகிறது.
 
இதன் மூலம் நாங்கள் அப்போதே [பாக்கர் ததஜவில் இருக்கும் போதே] பதிவு செய்து விட்டோம் என்று பீஜே சொன்னது அப்பட்டமான பொய் என்பதும், இதஜாபெயர் பதிவிற்கும் ததஜ நிர்வாகத்திற்கும் எள்ளளவும் சம்மந்தமில்லை என்பதும்  தெளிவாகிறது. எனவே ததஜ நிர்வாகத்திற்கு நாம் சில கேள்விகளை வைக்கிறோம்.
 
  1. இதஜவை அடக்கவேண்டும் என்று சிலர் கோரியபோது அதை கண்டுகொள்ளாமல் விட்ட மாநிலத்தலைமையின் கட்டளையும் மீறி, தனது குடும்ப சொத்தாக இதஜ பெயரை பதிவு செய்த பீஜே மீது என்ன நடவடிக்கை?
  2. பீஜேயின் இந்த செயலை ததஜ நிர்வாகம் ஆதரிக்கிறதா? ஆதரிக்கிறது என்றால், ததஜவில் இருந்து கொண்டே இன்னொரு அமைப்பை பதிவு செய்ய, இன்னொரு அமைப்பின் பெயரில் செயல்பட ததஜ நிர்வாகம் பொது அனுமதியளிக்கிறதா?
  3. பீஜேயின் குடும்ப அமைப்பான இதஜவின் தற்போதைய நிர்வாகிகள் மீது ததஜ நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதையே  முன்னுதாரணமாக கொண்டு, ததஜவில் உள்ள  ஒருவர் மற்றொரு அமைப்பை தொடங்கி நடத்தினால் ததஜ நிர்வாகம் அனுமதியளிக்குமா?
  4. அல்லது பீஜேயின் குடும்பச் சொத்தான இதஜ, ததஜவின் அங்கீகாரம் பெற்றதுதான் என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா?
  5. தவறு செய்பவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லும் ததஜ, மேலாண்மை குழு உறுப்பினராக இருந்து கொண்டே, தனது குடும்ப நபர்கள் மூலம் இன்னொரு அமைப்பின் பெயரை பதிவு செய்ததையும், ததஜவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு கூட தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'லிங்க்' கொடுக்காத பீஜே, கள்ள அமைப்பிற்கு ஆதரவாக, அதற்கென அமைக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு  தனது அதிகாரப் பூர்வ இணையதளம் மூலம் 'லிங்க்' கொடுத்து ஆதரவாக செயல்படுவதையும் ஆதரிக்கிறதா? ஒரு அமைப்பின் பிரதான தலைவராக இருந்து கொண்டே பக்கத்தில் இன்னொரு அமைப்பை வளர்க்கும் பீஜே மீது நடவடிக்கை எடுக்க ததஜ தயங்குவது, பீஜேயின் கைப்பாவை ததஜ என்பதாலா?
  6. இல்லை. ததஜ எவரது கைப்பாவையும்  இல்லை சுயமான அமைப்பு என்றால், தனி அமைப்பு கண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் ஏன்? 
குறிப்பு; ததஜ பதில் சொல்லப் போகிறதா? அல்லது ஏற்கனவே எங்களால் வைக்கப்பட்ட 17  கேள்விகளோடு இதையும் சேர்த்துக் கொள்ளப்போகிறதா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

Post a Comment