அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Tuesday, July 26, 2011

களை கட்டிய கடற்கரை தஃவா!

0 comments

களை கட்டிய கடற்கரை தஃவா!


முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைப்பதை முழு முதல் பணியாகக் கொண்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா குழு வாரந்தோறும், அரசு மருத்துவமனைகள், கோவில்கள், சர்சுகள் கடற்கரை என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மார்க்கத்தை எடுத்து சொல்லும் பிரசுரங்கள் மூலமும், மெகா ஃபோன் மற்றும் தனி நபர் சந்திப்பு மூலமும் எடுத்து சொல்லி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் சென்னை மெரினா கடற்கரையில் களம் இறங்கியது.
மாநிலப் பொருளாளர் தொண்டியப்பா, மாநில செயலர் இணையதுல்லாஹ், மாநிலப் பேச்சாளர் முஹம்மது மைதீன் ஆகிய மூவர் தலைமையில், சேப்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகர், சூளை மேடு, ஆஸாத் நகர், கிளைகளை சேர்ந்த சகோதரர்களும், மதுக்கூர் மைதீன் தலைமையிலான தஃவா சென்டர் மாணவர்கள் உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட சகோதரர்கள்   கடற்கரை எங்கும் அழைப்பு பணி மேற்கொண்டனர்.
மாநில செயலாளர் இணையதுல்லாஹ்  அவரது மனைவியுடன் சென்று கடற்கரைக்கு குடும்பமாக வந்திருதவர்களிடம் தங்களுடைய தஃவாவை மேற் கொண்டனர்.
கைரேகை ஜோஷ்யம் பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்தை அணுகி அதன் தீமைகளை எடுத்து சொல்லியதோடு, குறி சொன்ன பெண்ணிடமும் , எல்லோருக்கும் குறி சொல்லும் நீங்கள் உங்கள் வருமானம் எவ்வளவு என அறிய முடியுமா? என அவரிடமும் மார்கத்தை சொல்லி இந்த தொழிலை விட்டு விட்டு ஏதேனும் வியாபாரம் செய்தால் உங்களுக்கு நன்மையாக இருக்கும்  என அழகிய முறையில் அழைப்புப் பணி செய்தனர் நம் சகோதரர்கள்.
கடற்கரை தஃவாவின் ஹாய் லைட்டாக ஒரு கிறிஸ்தவ பிரசாரக் குழுவிடம் சென்ற மாநிலப் பேச்சாளர் மைதீன் தலைமையிலான குழு அவர்களிடம் ஈஸா (அலை) அவர்கள் குறித்தும், மர்யம் (அலை) குறித்தும் அல்குர்ஆன் கூறும் உயர்வான கருத்துக்களை எடுத்துக் கூறி, இயேசு தூதரே அன்றி வேறில்லை, இயேசு தன்னை கடவுள் என்று ஒரு போதும் தன்னை கூறவில்லை என்பதற்கு உங்கள் கையில் பைபிளே ஆதாரம் என அதை வாங்கி அதில் இருந்தே விளக்கிய போது அவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.
மேலும் நமது அலுவலக முகவரியை கொடுத்து இது குறித்து மேலதிக விளக்கம் தேவை என்றாலோ அல்லது அழகிய  முறையில் விவாதிப்பதற்கோ எப்போது வேண்டுமானாலும் வரலாம் என அழைப்பு விடுத்தனர்.
தஃவா குழு  அஸர் மற்றும் மக்ரிப் தொழுகையை கூட்டாக நிறைவேற்றியதும்   கலாச்சார சீரழிவின் களமான கடற்கரையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் அழைப்பு பணியானது.
அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் இறைவனுக்கே  !
-இப்னு ஹுஸைன்.

0 comments:

Post a Comment