ஆதரவு கோரி SDPI தலைவர்கள் INTJ தலைமையகத்தில்!
ஆதரவு கோரி SDPI தலைவர்கள் INTJ தலைமையகத்தில்!
தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்கள் , மற்றும் வேட்பாளர்கள் அன்றாடம் INTJ தலைமையகத்திற்கு வந்து கொண்டுள்ளனர். அந்த அடிப்படையில் SDPI தலைவர் தெஹ்லான் பாக்கவி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட குழு தலைமையகம் வந்தது! அவர்களை இஸ்லாமிய முகமன் கூறி வரவேற்ற மாநில நிர்வாகிகள் தேர்தல் நிலவரம் குறித்து பேசினர்.
மேலும் SDPI குறித்த சில விஷயங்கள் பற்றி சுட்டிக் காட்டப் பட்டது!
குறிப்பாக அவர்களின் விளம்பரம், நோட்டீஸ், போஸ்டர்
போன்றவற்றில்'பிஸ்மில்லாஹ்' தவிர்க்கப் படுவது பற்றியும்,
விநாயகர் சதுர்த்தி, பொங்கல் வாழ்த்து பேனர்கள் போன்ற விசயங்களை சுட்டிக் காட்டி 'இஸ்லாமிய அடையாளங்களை இழந்து தான் நாம் ஆட்சி அதிகாரங்களை பெற வேண்டுமா? எனக் கேட்ட போது அவர்கள் தரப்பில் விளக்கமளித்தனர் . த.மு.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் போட்டியை தவிர்க்கும்படி கோரிக்கை விடுக்கப் பட்டது!
0 comments:
Post a Comment