காஞ்சி மாவட்டம் கானத்தூர் பகுதியில் வீடு வீடாக சென்று தாஃவா !
கானத்தூர் பகுதியில் வீடு வீடாக சென்று தாஃவா !
எந்த நிலையிலும் தாஃவா , எந்த இடத்திலும் தாஃவா என இயங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தாஃவா குழு கடந்த ஞாயிறு அன்று விடுமுறை தினத்தில் கலாச்சார சீரழிவின் களமாக இருக்கும் கிழக்குக் கடற்கரை சாலையில் தன்னுடைய தாஃவாவை துவங்கியது!
தாஃவா குழு தலைவர் இணையதுல்லாஹ் தலைமையில் கானத்தூர் பகுதியில் ஒரு குழு வீடு வீடாக சென்று ஆம்புலன்ஸ் நிகழ்ச்சிக்க்கு அழைத்ததோடு தாஃவா சம்பந்தமான கையேடுகளை விநியோகித்து அழைப்பு விடுத்தது!
மாநில செயலாளர் செங்கிஸ்கான் தலைமையிலான குழு மெகா போன் மூலம் வீதி வீதியாக சமுகதீமைகளை இஸ்லாம் என் எதிர்க்கிறது? என பிரசாரம் செய்தது!
மதுக்கூர் மைதீன் தலைமையிலான மற்றொரு குழு மாயாஜால் ,கடற்கரை
போன்ற இடங்களில் சென்று அமைதி மார்க்கம் இஸ்லாம் எனும் கையேடு வழங்கி அழைப்பு விடுத்தது!
பொழுது போக்கும் தளங்களை சமுகத்தை பழுது பார்க்கும் களங்களாக மாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் பணியை அல்லாஹ பொருந்திக் கொள்ளட்டும்!
0 comments:
Post a Comment