INTJ வின் ரத்த தான சேவையை பாராட்டி பதக்கம்! அரசு பொது மருத்துவ மனை விழாவில்அமைச்சர் விருது!
அரசு பொது மருத்துவ மனை விழாவில் அமைச்சர் விருது!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மதங்களைக் கடந்த மனித நேய சேவையான இரத்த தான உதவிகளைப் பாராட்டி சென்னை அரசு ஸ்டான்லி மற்றும் RSRM மருத்துவமனைகள் விருது வழங்கிய செய்திகள் கடந்த சிலநாட்களுக்கு முன் நமது இணைய தலத்தில் வெளியிட்டிருந்தோம். இன்று 29.11.11 சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனை சார்பில் இன்று நடை பெற்ற விழா ஒன்றில் மாநில மருத்துவ அணி செயலாளர் கலிமுல்லாஹ் மாநில அமைச்சர் கையில் பதக்கம் மற்றும் விருதுகளைப் பெற்றார்.
அவருடன் தென் சென்னை வட சென்னை
மாவட்ட மருத்துவ அணி செயலாளர்கள் சேப்பாக்கம்,
கிருஷ்ணம் பேட்டை , எம்.ஜி.ஆர்.நகர், சூளை மேடு திருவல்லிக்கேணி உள்ளிட்ட கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு விருது மற்றும் பாராட்டுப் பத்திரங்களை பெற்றுக் கொண்டனர்.
0 comments:
Post a Comment