பரமக்குடி கலவரத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு
இ.த.ஜ.நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல்!
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று தமிழக காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். பல தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் காயமடைந்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் , சமுக அமைப்புகளும் பாதிககப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய போது இஸ்லாமிய அமைப்புகள் வழக்கம் போல் இதிலும் மவுனம் காத்தனர்.
பல் சமய இன மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒரு சமுகம் பாதிக்கப் படும போது மற்ற சமூகங்கள் ஓடோடி சென்று உதவ வேண்டும். குறைந்த பட்சம் ஆறுதல் சொல்ல வேண்டும். அப்போது தான் நாம் பாதிக்கப் படும போது தான் நமக்காக ஓடோடி வருவார்கள் . ஏற்கனவே முஸ்லிம்கள் தங்கள் விசயங்களுக்கு
மட்டுமே கவலை படுவார்கள்.பொதுவான பிரச்சனைகளை கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் குற்ற சாட்டு உள்ளது. ஆனால் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை பொறுத்த வரையில் யார் பாதிககப் பட்டாலும் குரல் கொடுக்கும் என்பதை பல் வேறு சந்தர்ப்பங்களில் நிருபித்துள்ளது.
அந்த அடிப்படையில் பரமக்குடி கலவரத்தால் பாதிககப் பட்டவர்களை நேற்று முன்தினம் மதுரை மருத்துவ மனையில் சென்று எஸ்.எம்.பாக்கர்., முனீர், மதுரை மாவட்ட தலைவர் ராஜா முஹம்மத்
ஆகியோர் அடங்கிய குழு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
0 comments:
Post a Comment