அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Thursday, September 22, 2011

ஜெயலலிதா மற்றும் மோடியின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து இன்று தடையை மீறி ஆர்பாட்டம்!

0 comments

ஜெயலலிதா மற்றும் மோடியின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து இன்று தடையை மீறி ஆர்பாட்டம்!


உலக அமைதிக்காக உண்ணாவிரதம் எனும் கபட நாடகத்தை அரங்கேற்றும் மோடியையும் அவருக்கு ஆதரவளித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்த ஜெயலலிதாவின் முஸ்லிம் விரோதப் போக்கையும் கண்டித்து இன்று தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தியது.
இதில் ஏரளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பங்கேற்றனர். ஒரே நாளில் முடிவு செய்து போஸ்டரோ பிட் நோட்டிசோ இன்றி வெறும் எஸ்.எம்.எஸ். மூலம் திரட்டப்பட்டு நடை பெற்ற இந்த போராட்டம் அல்லாஹ்வின் அருளால் அனைத்து ஊடகங்களிளிலும் முக்கிய செய்தியானது.
மோடிக்கு முஸ்லிம்கள் ஆதரவு என ஊடகங்களால் ஒரு பரப்பப் பட்டுக் கொண்டிருக்கும் போது ' எந்த முஸ்லிமும மோடியை ஆதரிக்க மாட்டான்' எனும் செய்தியை எடுத்து சொல்ல   போராட வேண்டிய தமிழக இயக்கங்கள் இந்த விசயத்தை கண்டு கொள்ளவில்லை என்பதும், 'நாங்கள் ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் பத்தாயிரம் பேரைக் கூட்டுவோம்' என்ற இயக்கங்கள் எல்லாம் போஸ்டரில்  எதிர்ப்பை தெரிவித்து முடித்துக் கொண்ட நிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைதாவோம் எனும் நிலையில் இந்தப் போராட்டத்தை நடத்தியது அனைத்து தரப்பின் பாராட்டுதலை பெற்றுள்ளது.
மேலும் லட்சக் கணக்கில் மக்களை திரட்டி கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கும் நிகழ்சிகளுக்கு  கிடைக்காத ஊடக வெளிச்சம் இந்த போராட்டத்திற்கு கிடைத்தது  அல்லாஹ் என்னத்திற்கு தான் வெற்றியை தருகிறான் எண்ணிக்கைக்கு அல்ல என்பதும் நமக்கு புரிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:

Post a Comment