அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Saturday, June 4, 2011

படிக்க விரும்பும் மாணவர்-பட்டை தீட்டுவார்களா சமதாய இயக்கங்கள்!

0 comments

படிக்க விரும்பும் மாணவர்-பட்டை தீட்டுவார்களா சமதாய இயக்கங்கள்!


இஸ்லாமிய சமுதாயம் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவைகளில் தலித் இன மக்களை விட தாழ்ந்து இருக்கிறார்கள் என நீதிபதிகள் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா குழுக்கள் சொல்கின்றன. ஆனால் நம்மிடையே அறிவுசால் இளைஞர்கள், மாணவர்கள் இல்லையா?! என்றால் இருக்கிறார்கள். அவர்களுக்க உதவ சமுதாய இயக்கங்கள் தயாரா என்ற கேள்வியினை எழுப்புகின்றார் ஒரு பள்ளி மாணவர்.
    27.5.2011 அன்று பத்தாம் வகுப்பு மாணவர் தேர்வு முடிவுகள் வெளியாயின. என்ன ஆச்சரியம் அதில் ஒரு முஸ்லிம் மாணவர் மாநிலத்திலேயே இரண்டாவது ரேங்க் வாங்கியுள்ளார். அவர் படம் 28.5.2011 பத்திரிக்கையில் வந்தன. நீங்களெல்லாம் நினைத்திருப்பீர்கள் அவர் மாநகரமான சென்னையிலே அல்லது மதுரை, திருச்சி மற்றும் கோவை போன்ற வசதியும், வாய்ப்பும் உள்ள நகரிலிருந்தோ, மிகவும் தரம் வாய்ந்த படிப்பினைத் தரும் பள்ளியிலிருந்தோ, மற்றும் பணத்தினை அள்ளி தெளித்து டூயுசன் வைத்து படித்த மாணவராக இருக்குமென்று. 
    ஆனால் அந்த மாணவர் திருநெல்வேலி மாவட்டத்தில் இஸ்லாத்தினையும், ஈமானையும் கட்டியாக பிடித்திருக்கும் மேலைப்பாளைய நகரைச் சார்ந்தவர் என்று நினைக்கும் போது நெஞ்சமெல்லாம் இனித்தது. ஏன் தெரியுமா? மேலைப்பாளையத்தில் சாதாரண பீடி சுத்தும் கம்பெனியில் மாதம் ரூ 4000 வருமானத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றும் அப்துல் ரஹ்மான் அவர்களின் மூத்த மகன் தான் அந்த மாணவர். தன் தந்தையின் நான்கு பிள்ளைகளில் மூத்த மகனான, மறைந்த ஈராக் அதிபர் மாவீரன் சதாம் ஹூசைனின் பெயரினைத் தாங்கியவர் படித்த பள்ளி முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியாகும்.  தன் குடும்பமே எதிர்பார்க்காத நிலையில் அவர் மாநிலத்தில் மொத்த 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தினை தட்டிச் சென்றுள்ளார்.
    தந்தை அப்துல் ரஹ்மான் தன் மகவினை கையைக் கட்டி, வாயைக் கட்டி மாநிலத்தில் சிறந்த மாணவனாக ஆக்கியதால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றிருப்பார் என நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கும் போது, 'தன் மகன் வெற்றி பெற்றதிற்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் தான் முக்கியம். மேல் படிப்பினை படித்து மெக்கானிக்கல் இன்ஜீரியங் ஆக வேண்டும். என சதாம் விரும்புகிறான். எனக்கு மேலும் மூன்று பிள்ளைகள் இருப்பதால் அவனை எப்படி இன்ஜினீரியங் படிப்பிற்கு படிக்க வைப்பது எனத் தெரியவில்லை என்று கவலையாக உள்ளது' எனக் கூறியுள்ளார்.
    ஏன் இல்லை என்று  சொல்லும் அளவிற்கு நமது சமுதாய இயக்கங்கள் பல்வேறு சேவைகள் செய்து வருவது கண்கூடானது. உதாரணத்திற்கு, 1) மைத்திற்கு ஜனாஸா ஐஸ் பெட்டிகள், 2) அவசர சிகிச்சைகளுக்கு ஆம்புலன்ஸ், 3) அறுவை சிகிச்சைக்களுக்குத் தேவைப்படும் ரத்ததானம்,4) ஏழைக் குமருகளுக்கு திருமண செலவுகள் ஏற்றல், 5) சுயவேலைகள் செய்வதிற்கு பொருளாதார உதவி, 6) வயதானவர்களுக்கு பொருளாதார உதவி போன்ற சேவைகளினை செய்து மக்களின் பாராட்டுதலை செய்கின்றனர.
    ஆகவே நமது சமுதாய இயக்கங்கள் ஸதாம் ஹூசைன் பேன்ற சிறப்பாக படிக்கும் மாணவ, மாணவியிரினை அடையாளம் கண்டு அவர்களை தத்தெடுத்து அவர்கள் மேல் படிப்பிற்க்கு உதவுவதுடன் அவர்களுக்கு அரசு மானியமும் கிடைக்க வழிவகை செய்யதால் கூலித்தொழிலாளி அப்துல் ரஹ்மான் போன்ற ஏழைப் பெற்றோர் குடும்பத்தில் உள்ளவர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் என்றால் மிகையாகுமா தோழர்களே!
-டாக்டர் ஏ.பீ.முஹம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

0 comments:

Post a Comment