அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Wednesday, May 4, 2011

இறந்த பின் லாட்டின் புகைப்படம் பொய்யானது: பிரிட்டிஷ் பத்திரிக்கை செய்தி!

0 comments

இறந்த பின் லாட்டின் புகைப்படம் பொய்யானது: பிரிட்டிஷ் பத்திரிக்கை செய்தி!

அல்காயிதா இயக்கத்தின் நிறுவனரும், தலைவருமாகக் கருதப்படும் ஒஸாமா பின் லாதின் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதிகாரப்பூர்வமாக நேற்று (02.05.11)அறிவித்தார். அவரின் உடல் கடலில் அடக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிகின்றன.
இதற்கிடையில் ஒஸாமாவின் இறந்த உடல் என புகைப்படம் ஒன்று உலகெங்கும் வெளியானது. இன்று (03.05.11) இந்தியாவின் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்திலும் அப்படம் வெளியாகி உள்ளது.
ஆனால் இப்படம் பொய்யானது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரிட்டிஷ் பத்திரிக்கை கார்டியன்செய்தி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது:
இப்படம் முதலில் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் வெளியானது. பின்னர் பிற ஊடகங்கள் அதனை உலகெங்கும் வெளியிட்டன. ஆனால் அப்படம் இரு படங்களின் கலவை. 1998 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பின் லாடினின் உண்மை படமும், இறந்த வேறொருவர் படமும், இணைக்கப்பட்டு இறந்த பின் லாதின் படம் என வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் இணையதளங்களில் இருவருடங்களாக உலவி வருகிறது.

நன்றி : முத்து இஸ்மாயில், காயல்பட்டிணம்.

0 comments:

Post a Comment