அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Friday, July 15, 2011

துபையில் இதஜவின் எழுச்சி மிகு இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 comments

துபையில் இதஜவின் எழுச்சி மிகு இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சென்ற வெள்ளிக்கிழமை (08.07.2011) அன்று துபை நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள லேண்ட் மார்க்க ஹோட்டல் வளாகத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மிக சிறப்பாக இறையருளால் நடைபெற்றது.வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜமீல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சகோதரர் ஜக்கரிய்யா அவர்கள் வரவேற்புரை நல்கினார்.


இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் S.M.பாக்கர் அவர்கள், கடந்த வந்த பாதை என்ற தலைப்பில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடந்த இரண்டரை வருட காலமாக செய்த பணிகளை மிக அழகாக பட்டியலிட்டார்.
மாநிலப் பொருளாளர் தொண்டியப்பா அவர்கள், ஒற்றுமையின் அவசியம் என்ற தலைப்பில் இன்றைய நிலையில் சமுதாய அமைப்புகளின் ஒற்றுமை குறித்து விளக்கினார். அடுத்தாக மாநிலச் செயலாளர் கோவை ஜஅஃபர் அவர்கள், தவ்ஹீதும் நாமும் என்ற தலைப்பில், தவ்ஹீதை கருவியாக்கி கொண்டு சமுதாயத்தை பிளப்படுத்துபவர்களின் நிலையை விளக்கினார்.
மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் அவர்கள் அழைப்புப் பணியின் அவசியம் குறித்தும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக நடைபெற்ற அழைப்பு பணியால் இஸ்லாத்தை நோக்கி வந்த நிகழ்வுகளையும் மிக அருமையாக விரிவுரைத்தார்.
ஜாக் அமைப்பின் மாநில துணைத் தலைவர் கோபை அய்யூப் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் மிக உருக்கமான உரை ஒன்றை ஆற்றினார். அவரது உரையால் கலந்து கொண்ட அத்தனை சகோதரர்களின் கண்களும் கசிந்தன.
இறுதியாக சகோதரர் அதிரை ஜமாலுதீன் நன்றியுரையுடன் துஆவும் ஒதினார்.
நிகழ்ச்சியினை கமாலுதீன், ஷாஹூல், அதிரை ஃபாரூக், அப்துல் காதர், சாதிக், முஹம்மது உள்ளிட்ட சகோதரர்கள் மிக சிறப்பான  ஏற்பாட்டினை செய்து இருந்தனர்.
-அபூ உமைமா.

0 comments:

Post a Comment